Monday, September 18, 2017

வேயுறு தோழி பங்கன் (Veyuru Tholipangan)

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும்  உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


நூல்: கோளறுபதிகம்

பொருள்:

மூங்கில் போன்ற தோள்களை உடைய உமையவளுக்கு தன் உடம்பில் பாகம் கொடுத்தவன்!
உயிர்களை காக்கும் பொருட்டு விடத்தை அருந்தி தன் கழுத்தினில் தாங்கியவன்!
மிக இனிமையாக வீணையை வாசித்து கொண்டு,
களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு ,
என் உள்ளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால்,
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் பாம்பாகிய ராகு கேது என்னும் ஒன்பது கோள்களும் உடனே குற்றமற்றதாக விளங்கி சிவனடியாருக்கு என்றும் நல்லதையே செய்யும்.

No comments:

Post a Comment