Monday, September 18, 2017

ஸ்ரீ சக்ர வாசினி ( Sri chakra vaasini)

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி
சிவசக்தி ரூபினி கல்யாணி நீ 
ஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரி 
உன் பாதம் சரணடைந்தேன் மாதேஸ்வரி 
                                               (ஸ்ரீ சக்ர )

இரு கைகளால் தொடுத்த பூமாலைகள் 
இதயத்தினால் தொடுத்த பாமாலைகள் 
அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா 
அடியேனை எந்நாளும் காப்பாயம்மா 
                                               (ஸ்ரீ சக்ர )

தீர்த்தங்கள் அத்தனையும் சரணாலயம் 
தீபம் தெரிந்த இடம் அருணாச்சலம் 
வாய்த்த சபைகள் எல்லாம் பொன்னம்பலம் 
மாதா பிதா குரு நீ என் பலம் 
                                               (ஸ்ரீ சக்ர )

வேயுறு தோழி பங்கன் (Veyuru Tholipangan)

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும்  உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


நூல்: கோளறுபதிகம்

பொருள்:

மூங்கில் போன்ற தோள்களை உடைய உமையவளுக்கு தன் உடம்பில் பாகம் கொடுத்தவன்!
உயிர்களை காக்கும் பொருட்டு விடத்தை அருந்தி தன் கழுத்தினில் தாங்கியவன்!
மிக இனிமையாக வீணையை வாசித்து கொண்டு,
களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு ,
என் உள்ளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால்,
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் பாம்பாகிய ராகு கேது என்னும் ஒன்பது கோள்களும் உடனே குற்றமற்றதாக விளங்கி சிவனடியாருக்கு என்றும் நல்லதையே செய்யும்.

முருகன் - ஏறுமயில் ஏறி (Erumayil Eri)

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே!


நூல்: திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

விநாயகர் - மூஷிக வாகன (Mooshiga Vaagana)


மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!

பொருள்:
எலியை தன்னுடைய வாகனமாக கொண்டவரே, மோதகத்தை (தேங்காய், வெல்லம், பருப்பு சேர்ந்த இனிப்பு வகை) விரும்பி வைத்திருப்பவரே ,
விசிறியை போன்ற காதை உடையவரே, இடையில் சங்கிலியை அணிந்திருப்பவரே,
குள்ளமான சிலையை உடையவரே, சிவபெருமானின் புதல்வரே!
முழுமுதற் கடவுளே! தடைகளை தகர்த்தெறியும் விநாயகா! உன் பாதத்தை வணங்குகிறேன்! 



விநாயகர் - பாலும் தெளிதேனும் (Paalum Thelithenum)


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய்துங்க  கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

பொருள்:

பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான உனக்கு நான்  நைவேத்தியமாக படைக்கிறேன்.
கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க  (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக !